கூட்டு எதிர்க் கட்சிகள் மே தின ஊர்வலத்தை வேறாக நடாத்த வேண்டும் என முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேட்டுள்ளார்.
மினுவாங்கொடயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தான் இன்னும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் என்பதனால், கட்சியின் மே தினக் கூட்டத்திலும் கூட்டு எதிர்க் கட்சிகளின் மே தினக் கூட்டத்திலும் கலந்துகொள்ள முடியும் எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக கூட்டு எதிர்க் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்வாறிருக்கையில், கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு தனியான மே தினக் கூட்டமொன்றை நடாத்த இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் டிலான் பெரேரா கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.