கூட்டு எதிர்க் கட்சியின் பலர் விரைவில் அரசாங்கத்துடன்




கூட்டு எதிர்க் கட்சி விரைவாக கரைந்து சென்று கொண்டிருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எமது அரசாங்கத்துடன் நேற்றும் இருவர் இணைந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்றார். எதிர்வரும் நாட்களிலும் இன்னும் சிலர் அரசாங்கத்துடன் சேரவுள்ளனர். தற்பொழுது அது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிக்கொத்த தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.