முச்சக்கர வண்டி- ஜீப் விபத்தில் இருவர் பலி




தம்புள்ளை - ஹபரண பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜீப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த கிரிவடுவத்த பிரதேசத்தினை சேர்ந்த 35 மற்றும்,42 வயதுடைய நபர்களே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜீப் ரக வாகனத்தில் பயணித்த திருகோணமலை பிரதேசத்தினை சேர்ந்த இரண்டு நபர்களையும் கைது செய்தள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.