சம்மாந்துறை, ஹிஜ்ரா வீதி பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த யுவதி வீட்டின் அறை ஒன்றில் புடவை மூலம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
17 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்