இத்தாலிக்குள் நுழையும் குடியேறிகள் அதிகரிப்பு




மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்குள் நுழையும் குடியேறிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

மத்திய தரைக்கடல் வழியாக வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை எட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் குடியேறிகள் 19 ஆயிரம் பேர் இத்தாலிக்குள் நுழைந்துள்ளனர் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் பத்தாயிரம் பேர் அதிகமாக இத்தாலிக்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா. மேலும் கூறியுள்ளது.
இவ்வாறு மத்திய தரைக்கடலைத் தாண்டி வருபவர்களில் அநேகமானோர் மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களாவர்.
இதனிடையே சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளிலிருந்து, கிரேக்கத்தினூடாக சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் குடியேறிகள் ஐரோப்பாவுக்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.