ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் மிக விரைவில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுச் செயலாளர் பதவி இரண்டாம் நிலை உறுப்பினர்களில் ஒருவருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான சிபார்சுகளில் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசத்தின் பெயர் முன்னிலையில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.