அம்பாறையில் ஆணின் சடலம்




அம்பாறை மொரவில் பகுதியிலுள்ள இரும்புப் பாலத்திற்குக் கீழ், ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை – சாமபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்ட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படவுள்ளது.