காலநிலை குறித்து நிலையான கருத்தைக் கூற முடியாதுள்ளது போன்று அமைச்சர்களின் எண்ணிக்கை எத்தனை ? என்பதை இந்நாட்டில் கூற முடியாதுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அமைச்சுப் பதவி வழங்குவதில் கடந்த அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. எந்தவித ஒழுங்கு முறையும் அமைச்சுப் பதவி வழங்கும் போது கைக்கொள்ளப்படுவதில்லை.
நேற்று களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு வட மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சுப் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. பாலித தெவரப்பெரும என்பவர் எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதையாவது விளங்கிக் கொள்ள முடியாத ஒரு நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்