ஐ.தே.க, சீன கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் உடன்படிக்கை




சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் தொடர்புகளை விரிவாக்கும் நோக்கில் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச பிரிவு அமைச்சர் சொங் தஓ மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன, பெய்ஜிங் நகரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளுக்கிடையிலும் நட்புறவை உறுதிப்படுத்தும் பல திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர்களான மங்கள சமரவீர, மாலிக் சமரவிக்கிரம, சஜித் பிரேமதாச, சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் ஆதாவுதஹெட்டி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளர் மஹிந்த ஹரதாஸ ஆகியோர் இந்த சந்திப்பில் பிரதமருடன் இணைந்திருந்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சீனா சென்றமை குறிப்பிடத்தக்கது.