பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் வகித்து வரும் தேசியத் தலைவர் பதவி ரத்து செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் 5ம் திகதி கட்சியின் பொதுச் சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பல வருடங்கள் எதிர்கட்சியில் இருந்தது. இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க தனது கட்சியின் தலைவர் பதவியை பாதுகாத்துக்கொள்ள தலைமைத்துவ சபை ஒன்றை நிறுவி சஜித் பிரமேதாசவுக்கு பிரதித் தலைவர் பதவியும் கரு ஜயசூரியவிற்கு துணைத்தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.
தற்பொழுது ரணில் விக்ரமசிங்க வகித்து வரும் தேசியத் தலைவர் பதவிஇ தலைமைத்துவ சபைஇ பிரதித் தலைவர்இ துணைத்தலைவர்இ தேசிய அமைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்படவுள்ளன.
மீண்டும் ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார். எனினும் கட்சியின் தவிசாளர்இ பொரளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் மாற்றமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.