65 ஆயிரம் வீடுகள் திட்டத்துக்கு தடங்கல் இல்லை: சுவாமிநாதன்




வடக்கில் அமைக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் அமைப்பு திட்டத்துக்கு தடங்கல் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி எம் சுவாமிநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான செய்திகளை மறுத்து இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வீடமைப்பு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களை ஆராய்ந்து முடிவெடுக்க நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட்டோர் உள்ளடங்கும் குழு ஒன்று அமைக்கப்பட்டு இந்த ஆராய்வு இடம்பெறவுள்ளதாகவும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.