கோத்தாவின் பாதுகாப்புக்கு 50 பேர், மஹிந்தவுக்கு 256 பேர் -பாதுகாப்பு செயலாளர்




முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பாதுகாப்புக்கு தற்பொழுது 50 இராணுவத்தினர் வழங்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்தவின் பாதுகாப்பு எந்தவின் பாதுகாப்புக் குறைக்கப்படவில்லையெனவும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மஹிந்தவுக்கு 256 பேரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் அடங்குகின்றனர். பாதுகாப்பு நீக்கப்பட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லையெனவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.