சம்பூர் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து 60 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த 44 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பூர் பிரதேசமானது கடந்த 9 வருடங்களாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததோடுஇ கடந்த 25 ஆம் திகதியே பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பிரதேசத்திற்கு மீள்குடியேற்றத்திற்காக வந்தவர்கள் நேற்றைய தினம் குறித்த கிணற்றினை துப்பரவு செய்த சந்தர்ப்பத்திலேயே இந்த மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.