பொகவந்தலாவையில் அடைமழை : 42 பேர் இடம்பெயர்வு, 12 வீடுகளில் வெள்ளம்




பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (07) வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின் காரனமாக 12 வீடுகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கடுத்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளதாக பாதிக்கபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீடுகளுக்கு அருகில் உள்ள கால்வாயினை அகலபடுத்தி தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் குறித்த தோட்டமக்கள் கோரிவந்த போதிலும் இதுவரையிலும் குறித்த கால்வாய் அகலபடுத்தபட வில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.