நானுஓயா வனப்பகுதியில் தீப்பரவல் - 3 ஏக்கர் நாசம்




(க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ தோட்டப்பகுதியில் உள்ள மானாபுல் வனப்பகுதியில் 03.04.2016 அன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

ஆறு ஏக்கரைக் கொண்ட இந்த 'மானாபுல்' வனப்பகுதியின் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நானுஓயா பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு தனமாக தீ வைத்ததன் காரணமாக இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.