தற்கொலை அங்கி 2008 உற்பத்தி- பயங்கரவாத விசாரணைப் பிரிவு




தற்கொலை அங்கியும் வெடிபொருட்களும் ஏன் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை காரணங்கள் வெளிவராத போதிலும்இ குறித்த பொருட்கள் அனைத்தும் கடந்த 2008 ஆம் ஆண்டு உற்பத்தி ய்யப்பட்டவைகள் என தெரியவந்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த தற்கொலை அங்கிக்குச் சமமான அங்கிகள் பல கடந்த 2008 ஆம் ஆண்டு பாதுகாப்புப் பிரினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவரிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொண்ட போதிலும் குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் தெரியவராதுள்ளதாகவும் பயங்கரவதம் தொடர்பான விசாரணைப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.