பஸ்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் 1955 இற்கு அறிவிக்கவும்




பண்டிகைக் காலங்களில் பஸ் வண்டிகளில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பாக அறிவிக்க விஷேட தொலைபேசி எண்ணினை போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1955 அல்லது 0112333222 ஆகிய இலக்கங்களினூடாக அழைத்து முறைப்பாடுகளை பயணிகள் தெரிவிக்க முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு போக்குவரத்து சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விஷேட பஸ் வண்டிகளில் இடம்பெறும் அதிக பணம் வசூலிப்பு, பஸ் பிரயாணச் சீட்டு வழங்காமை, குறிப்பிட்ட வீதிகளில் பயணிக்காமல் இடை நடுவில் போக்குவரத்து பாதையினை மாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக குறித்த தொலைபேசி இலக்கங்களினூடாக அறிவிக்க முடியும் என போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்தப் பிரதேசங்களுக்கு செல்வோர் தனியார் போக்குவரத்து சங்கத்தினூடாக தொடர்பு கொண்டு பஸ்களை முன்பதிவு செய்து கொள்ளமுடியும் எனவும் தனியார் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.