18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதை மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சால் மாத்திரம் தடுக்க முடியாது. மதம் சார்ந்த விஷயம் என்பதால் முஸ்லிம் தரப்பினருடன் பேசிய பின்னரே தீர்மானத்திற்கு வர முடியும் எனஅமைச்சர் சந்திராணி பண்டார பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் 18 வயதுக்குட்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பில் அந்த சமூகத்திலிருந்தே எதிர்ப்புகள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்இ தானும் ஒரு தாய் என்ற வகையில்இ 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அகவே இந்த விடயம் தொடர்பில்இ முஸ்லிம் அமைச்சர்கள்இ சமூகப் பிரதிநிதிகள்இ நீதி அமைச்சு என பல்தரப்புடன் கலந்துரையாடிய பின்னரேஇ தன்னால் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை முஸ்லிம் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்கப்படுவதை மதப் பிரச்சினையாக பார்க்காமல்இ சிறுவர் நலன் மற்றும் சமூகப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் எனஇ புதிய அரசியல் சாசனக் குழுவினர் முன்னர் ஆலோசனை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.