சீன நிறுவனம் அரசாங்கத்திடம் 125 மில்லியன் டொலர் நஷ்டஈடு கோரல்




துறைமுக நகர் நிர்மாணப் பணிகள் தாமதமடைந்துள்ளமையினால் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்இ இதற்கு ஈடாக  125 மில்லியன் டொலர்களை வழங்குமாறும் சீன நிறுவனம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் கொழும்பு துறைமுக நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.

இது தொடர்பில் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு அரசாங்கம் தற்பொழுது சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிரதமரின் விஜயம் எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.