இலங்கை சனத்தொகையில் 11.5 வீதமானோருக்கு நீரிழிவு




நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் மக்களின் எணிக்கை குறிப்பிடத்தக்க மட்டத்துக்கு வந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் 11 பேர்களில் ஒருவர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிகின்றன.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் நீரிழிவு நோய்க்கு உள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு உலகம் பூராகவும் பதிவாகியுள்ள நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை 422 மில்லியன்களாகும். குறித்த எண்ணிக்கை 1980 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கை சனத்தொகையில் 11.5% மக்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
சரியான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நீரிழிவு காரணமாக ஏற்பட்ட மரணங்கள் 1.5 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது