சீன அரசாங்கம் இலங்கைக்கு 1121 கோடி ரூபா உதவி




இலங்கை – சீனா  நட்புறவை நினைவுபடுத்தும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது சீன அரசாங்கத்தினால் 1121.13 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்க அந்நாட்டு பிரதமர் லீ கொங் உடன்பட்டுள்ளார்.
இலங்கை தூதுக் குழுவை சந்தித்த போது இந்த அறிவிப்பை சீன பிரதமர் விடுத்துள்ளார்.
இலங்கையில் சீனாவின் முதலீடு, பொருளாதார வலயம், கைத்தொழில், உற்பத்தி போன்றவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது.