110 கிலோ ஹெரோயின் கடத்தல் : இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கைது




ஈரா­னிய மீன்­பிடிக் கப்பல் ஒன்றினூடாக பாகிஸ்­தா­னி­லி­ருந்து இலங்­கைக்கு கடத்­து­வ­தற்­காக கொண்­டு­வ­ரப்­பட்ட 110 கோடி ரூபா பெறு­ம­தி­யான 110 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை ஆசிரி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த நபர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளைஇ தென் கட­லி­லும் நீர்­கொ­ழும்பு பகு­தி­யிலும் வைத்து கைது செய்­யப்­பட்ட 14 வெளி நாட்டு சந்­தேக நபர்­களும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கோட்டை நீதிவான் நீதி­மன்றில் பெற்­றுக்­கொண்ட விஷேட தடுப்புக் காவல் உத்­த­ர­வுக்கு அமை­வா­கவே அவர்கள் அனை­வரும் 7 நாள் தடுப்புக் காவல் உத்­தர்வின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரணை செய்­யப்­ப­டு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த முதலாம் திகதி காலி பிர­தே­சத்தில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் ஆழ்­க­டலில் ஈரான் கொடி­யுடன் மீன் பிடியில் ஈடு­ப­டு­வதைப் போன்று பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த கப்­பலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விஷேட குழுவும் கடற்­ப­டையின் குழுவும் சேர்ந்து கைது செய்­தன. இதன் போது கப்­பலில் இருந்து 10 ஈரான் பிர­ஜை­களும் ஒரு பாகிஸ்தான் பிர­ஜை­யு­மாக 11 பேர் கைது செய்­யப்­பட்­டனர். இவர்­களில் 11 வய­து­டைய சிறுவன் ஒரு­வனும் அடங்­கு­வ­தா­கவும் அவன் ஈரான் நாட்டை சேர்ந்­தவன் எனவும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.