தெற்குக் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த தேடுதலின் போது 101 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான கப்பலொன்றை சோதனைக்குட்படுத்தியபோதே பெருந்தொகை ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை கடற்படையினர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.