வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்புக்கு ஆயுத விநியோகம் மேற்கொள்ளும் செயற்பாட்டின் ஊடாக கடற்படையினர் நான்கு மாதங்களில் 100 கோடி ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் நிறுவனம் மேற்கொண்டு வந்த வர்த்தகக் கப்பல்களுக்கான பாதுகாப்புப் பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடற்படையினர் பொறுப்பேற்றிருந்தனர்.
எனினும் கடற்பாதுகாப்பு கமாண்டோக்களை வழங்கும் செயற்பாட்டில் தொடர்ந்தும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கான ஆயுத விநியோக செயற்பாட்டை மட்டும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம் கடந்த நான்கு மாத காலத்தினுள் மாத்திரம் கடற்படையினருக்கு 100 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி துறைமுகத்தை மையமாகக் கொண்ட ஆயுத விநியோகங்கள் மூலம் தொண்ணூற்றி எட்டு கோடி ரூபாவும், கொழும்பு துறைமுகத்தை மையமாகக் கொண்ட ஆயுத விநியோக செயற்பாடுகள் மூலம் மூன்று கோடி ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
கடந்த நவம்பர் 13, 2015 முதல் இந்த வருடம் ஏப்ரல் 6 ஆம் திகதிவரையில் அவன்ட்கார்ட் கரையோர சேவைகள் மூலம் கடற்படையினர் ஒரு பில்லியன் ரூபாய்களை வருமானமாக பெற்;றுத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடற்படையின் பேச்சாளர் அக்ரம் அலவி இதனை இன்று தெரிவித்துள்ளார். கடற்படையினர் குறித்த காலப்பகுதிக்குள் காலி துறைமுகத்தில் இருந்து 2689 நகர்வுகளை
மேற்கொண்டிருந்தனர்
மேற்கொண்டிருந்தனர்
இதன்மூலம் 980 மில்லியன் ரூபாய்கள் வருமான கிடைத்தது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட 105 நகர்வுகள் மூலம் 30 மில்லியன்
ரூபாய்கள் வருமானமாக ஈட்டப்பட்டதாக அலவி குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய்கள் வருமானமாக ஈட்டப்பட்டதாக அலவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நவம்பர் மாதம் முதல்காலப்பகுதியிலேயே எவென்காட் நடவடிக்கைகளை அரசாங்கம் கடற்படையினருக்கு கையளித்தது.