கெழும்பின் சில பகுதிகளில் நாளை 07 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (02) இரவு 10 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணிவரை நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மோதரை, மட்டக்குளிய, பேஸ்லைன் வீதியின் களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உள்வீதிகளிலும் நிர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதுதவிர செட்டியார் தெரு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளக வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
முக்கியமான திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ள காரணத்தினாலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட உள்ளதாக அந்த சபை மேலும் கூறியுள்ளது.