டில்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக கடைசி ஓவர் வரை உறுதியாக நின்று ஆடி 73 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருந்தபோதிலும் அவரால் அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை.
முன்னதாக இலங்கை அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததே இலங்கை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது.முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை எடுத்தது. அதில் பட்லர் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை எடுத்தார்.
நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒன்றாம் பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இரண்டாவது பிரிவில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக தகுதி பெறும் அணி இந்தியாவா அல்லது ஆஸ்திரேலியாவா என்பது ஞாயிற்றுகிழமை தெரிந்துவிடும்.
#CWCT20 இனைப் பொறுத்தவரையில் அதனை தொடந்தேர்ச்சியாகத் தக்கவைத்த அணி எதுவுமே இல்லையெனலாம்