கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு குவைட் அரசின் கடனுதவி




கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு 34 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க குவைட் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை அரசின் நிதி அமைச்சுடன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குவைட் நிதியத்திலிருந்து இலங்கைக்கு வழங்கப்படும் 14 வது கடனுதவி இதுவாகும்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்ட கடனுதவி தொகை 213 மில்லியன் டொலர்கள் என குவைட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.