நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை




நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பாகங்களிலும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
வெப்பமான பிரதேசங்கள் மட்டுமன்றி நுவரெலியா போன்ற குளிர் பிரதேசங்களிலும் கடுமையான வெப்பம் நிலவி வருவதாகவும், விவசாய நடவடிக்கைளும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், கடுமையான வெப்ப நிலை உடல் உறுப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருதயம், மூளை, சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் அதிக நேரம் வெய்யிலில் இருப்பதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும்
கர்ப்பிணிகள் வெப்பத்தில் இருப்பதனால் கருக் கலையக்கூடிய ஆபத்து காணப்படுவதாக மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவு நீரை பருகுவதன் மூலம் ஓரளவு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.