இந்த ஆண்டின் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
2015 - 16ஆம் ஆண்டிற்கான திரைப்பட தேசிய விருதுகள் திங்கட்கிழமையன்று அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகருக்கான விருது பிக்கு படத்திற்காக அமிதாப் பச்சனுக்கும் தனு வெட்ஸ் மனு படத்திற்காக கங்கணா ரனவத்திற்கும் கிடைத்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய விசாரணை திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவிசிறந்த இயக்குனருக்கான விருதை பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி பெற்றிருக்கிறார்.
சிறந்த படத் தொகுப்பிற்கான விருது விசாரணை படத்திற்காக கிஷோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இறுதிச் சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங்கிற்கு சிறப்புப் பரிந்துரை விருது வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழில் தயாரான விசாரணை திரைப்படம், சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது.
சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை இளையராஜாவுக்குப் பெற்றுத் தந்திருக்கும் தாரை தப்பட்டை திரைப்படம் அவரது 1000வது படமாகும்.ல் சிறந்த படமாக ராஜமௌலி இயக்கிய பாகுபலி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
விசாரணை படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.