(க.கிஷாந்தன்)
நுவரெலியா கல்வி வயத்திற்குட்பட்ட தலவாக்கலை - சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடைவு மட்டம் 78 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் 31 மாணவர்கள், திறமை சித்திகளை பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் டி.வடிவேல் தெரிவித்துள்ளார்.
இப்பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய 40 மாணவர்களுள், 31 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளதுடன், 31 மாணவர்களும் க.பொ.த உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அந்தவகையில் வி.அஜித்குமார் - 8ஏ, 1சீ, டீ.லலித்குமார் – 8ஏ, 1பீ, ஏ.ஐஷாநிலானி – 5ஏ, 3பீ, 1எஸ், ஆகியோர் அதிவிஷேட சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடதக்கது.