சிவனொளிபாதமலைக்கு சென்ற பெண் மரணம்




(க.கிஷாந்தன்)

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்ற பெண் ஒருவர் 25.03.2016 அன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த ஓ.பி. ரிட்டா பெர்ணாந்து 60 வயது மதிக்கதக்க வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் சிவனொளிபாத மலையில் இருந்து நல்லதண்ணி நோக்கி இறங்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.