(க.கிஷாந்தன்)
பலாங்கொடையில் இருந்து அட்டன் வழியாக கண்டி திகன பகுதிக்கு சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 400 அடி பள்ளதில் விழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் 30.03.2016 அன்று விடியற் காலை 02 மணியளவில் பலாங்கொடை அட்டன் பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றசோ தோட்ட பகுதியில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார தெரிவிக்கின்னறனர்.
அட்டனில் இருந்து பலாங்கொடை பகுதியை நோக்கி சென்ற ஜிப் வண்டி ஒன்றுக்கு குறித்த பாரவூர்தி இடமளிக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே ஏற்பட்ட விபத்தின் ஊடாக சாரதிக்கு எவ்வித காயங்களும் எற்படவில்லையெனவும் பெருமளவிலான சேதம் பாரவூர்த்திக்கு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.