தேசிய ஷூரா சபையின் ஐந்து வருட மூலோபாயம்




தேசிய ஷூரா சபையின் இலங்கை முஸ்லிம்களுக்கான ஐந்து வருட மூலோபாய திட்டம்.
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபை இலங்கை முஸ்லிம்களுக்கான ஐந்து வருட மூலோபாய திட்டமிடலை  தமது பொதுச் சபைக் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது
1.முஸ்லிம் சமூகத்தை முழுமையான பார்வையில் பார்த்து சமகாலத்தில், எதிர்காலத்தில் நிலவக் கூடிய தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கான முன் மொழிவுகளை வைக்கும் சபையாக தேசிய ஷூரா சபை இருக்க வேண்டும் .
2.தேசிய ஷூரா சபை சமூகத் துறைகளில் நிலவும் பிரச்சினைகளை அடையாளங்கண்டு அந்த பிரச்சினையை குறைப்பதற்காக அல்லது நீக்குவதற்கான வேலைத் திட்டங்களை தமது அங்கத்துவ அமைப்புகளுக்கு பகிந்தளிப்பதுடன் நின்று விடாது அதனையும் நிர்வகித்தல், ஊக்கப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
3.கடந்த காலத்தில் தேசிய ஷூரா சபை இந்த நாட்டில் அடைந்த அடைவுகள் தொடர்பாக மதீப்பீடுகளை செய்துஅதனை முன்னேற்றுவதற்கான வழிவகைகளை தேட வேண்டும்.

4.தனிமனித தலைமைத்துவ ஆதிக்கத்தை தகர்த்து ஷூரா முறைமையிலான தலைமைத்துவத்தை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உருவாக்குதல் வேண்டும்.
நடப்பு ஆண்டுக்கான நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
தலைவர்: ஜே. தாரிக் மஹ்மூத்
உப தலைவர்கள்:
எஸ்.எச்.எம் பழீல்
சட்டத்தரணி சகோ. டீ. கே அஸூர்
பொறியியலாளர் ரீஸா யஹ்யா
பொதுச் செயலாளர்: சட்டத்தரணி மாஸ் எல். யூஸுப்
உதவிப் பொதுச் செயலாளர்:
எம். டீ தாஹாசிம்
எம். பார்ஸான் ராஸிக்
பொருளாளர் :ஸியாத் இப்ராஹீம்
உதவிப் பொருலாளர்: எம். ஆர். எம் ஸரூக்