வெற்றிடங்கள்




வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் கோட்டக்கல்விப் பணிப்பாளர்,  

உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கேரப்பட்டுள்ளன. கோட்டக்கல்லி அலுவலகம் - நல்லூர் , கோட்டக்கல்வி அலுவலகம் - கோப்பாய், கோட்டக்கல்வி அலுவலகம் - வெலி ஓயா ஆகிய கோட்டக்கல்வி  அலுவலங்களிற்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பதவிக்கு வடமாகாணத்தில் கடைமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை - 3, இலங்கை கல்வி நிர்வாக சேவை 2 ( பொது) ஆளனியைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும், அதிபர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களிடம் இருந்தும்  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

கோட்டக்கல்விப்பணிப்பாளர் விண்ணப்பிக்க விரும்புவோர் வலயக்கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களினைப் பெற்று வலயக்கல்விப்பணிப்பாளரின் சிபார்சுடன் 04.04.2016 இற்கு முன்னர் செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம், செம்மணி வீதி நல்லூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணபதாரிகள் ஆகக் குறைந்ததேனும் 3 வருட காலமேனும் சேவையாற்றக்கூடிய வயதெல்லை உடையவராயிருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வலிகாமம்  வலயக்கல்வி அலுவலகம் உதவிக்கல்விப்பணிப்பாளர் முன்பள்ளி (1), மன்னார் வலயக்கல்வி அலுவலகம் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆரம்பக்கல்வி (91)  ஆகிய  வலயக்கல்வி வலயங்களிற்கு பாடரீதியான உதிவக்கல்விப்பணிப்பாளர் பதவி வெற்றிடங்களுக்கு வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற  இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்  மற்றும் இலங்கை ஆசிரியர் சேவையை சேர்ந்தவர்களிடம் இருந்தும்  விண்ணப்பங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால்  கோரப்படுகின்றது.  

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் வலயக்கல்வி அலுவலகத்தில்  விண்ணப்பங்களினைப் பெற்று வலயக்கல்விப்பணிப்பாளரின் சிபர்சுடன் 04.04.2016 இற்க்கு முன்னபாக செயலாளர், கல்வி அமைச்சு, வடமாகாணம், செம்மணி வீதி நல்லூர் என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும் என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அறிவித்துள்ளார்.