பிரிட்டிஷ் யூனியன் கொடியை உள்ளடக்கிய தேசியக் கொடியையே நியுசிலாந்து தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதுவரை எண்ணப்பட்டுள்ள 20 லட்சம் வரையான வாக்குகளின் முதற்கட்ட முடிவுகளின்படி, 57 வீதமான மக்கள் வேறு கொடியொன்றை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரித்துள்ளனர்.
ஃபேர்ன் என்ற ஒரு வகைத் தாவரத்தின் இலையுடன் கூடிய கறுப்புநிறக் கொடியை புதிய கொடியாக கொண்டுவர வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ஜான் கீ கடுமையாக ஆதரித்துவந்தார்.
புதிய முடிவினை அடுத்து கருத்து தெரிவித்த பிரதமர், நாட்டின் தேசியக் கொடியை மக்கள் ஏற்றுக்கொண்டு பெருமைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.