இந்தியாவுக்கு சாவு மணி அடித்த மே.இ அணி





உலகக் கோப்பை டி 20 போட்டியின் அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியாக ஆடி இந்திய அணியை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்களின் மகளிர் அணியும் இறுதி ஆட்டத்தில் ஆடுகின்றனர்.
வெற்றிக் களிப்பில் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர்
மும்பையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

எதிர்வரும் ஞாயிறு கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுவார்கள்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் 5 ஓட்டங்களே எடுத்து ஆட்டமிழந்தாலும், லெண்டல் சிம்மன்ஸ் நிதானமாக உறுதியுடன் ஆடி தமது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற பெரிதும் உதவினார்.

சிம்மன்ஸ் மற்றும் ரசல் அதிரடி ஆட்டம்
அவருக்கு உறுதுணையாக இருந்த ஆண்ட்ரே ரசலும் அபாரமாக ஆடி ஓட்டங்களை குவித்து வந்தார்.
முன்னதாக இந்திய அணி தமது 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ஓட்டங்களை எடுத்தது. இதில் விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 89 ஓட்டங்களை எடுத்தார்.

துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் அகிஞ்சய் ரஹானி இந்திய அணிக்கு வலுவான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
எனினும் மேற்கிந்தியத் தீவுகள் அணி கெயில் மற்றும் சாமுவேல் மார்லன்ஸை விரைவாக இழந்தாலும் பின்னர் ஆடவந்த சிம்மன்ஸ் மற்றும் ரசல் தமது அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தனர்.