(க.கிஷாந்தன்)
கடந்த காலங்களில் மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது.
இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள (மொறபே பழைய நகரில்) பௌத்த விகாரை ஒன்று 25 வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் வெளித் தெரிகிறது.
இதனால் நீரில் மூழ்கிய பௌத்த விகாரை மற்றும் பழைய நகரம், கிராமம் மீண்டும் மக்களின் கண்களுக்கு தெரிகின்றது.
இதனை பார்வையிட பல பகுதிகளிலும் இருந்து மக்கள் படையெடுத்து வருகின்றனர். அத்தோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டு செல்கின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது.
கொத்மலை மொறபே பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை உட்பட கிராமம் கொத்மலை நீர்தேக்கம் ஆரம்பிக்கும் போது, நீரினால் மூடப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.
கொத்மலை மொறபே பழைய நகரில் இருந்த பௌத்த விகாரை உட்பட கிராமம் கொத்மலை நீர்தேக்கம் ஆரம்பிக்கும் போது, நீரினால் மூடப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.