காத்தான்குடியில் காணாமல்போன வயோதிபர் சடலமாக மீட்பு
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து புதன்கிழமை மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாலமுனை, ஓடாவியார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் இருந்தே ஜனாஸா மீட்கப்பட்டுள்ளது.
பாலமுனை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய துவிச்சக்கரவண்டி திருத்துனர் எம். ஜெயினுலாப்தீன் (நண்டு பாஸ்) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி அவரின் மகன் தெரிவிக்கையில்...
தனது தந்தை செவ்வாய்க்கிழமை காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் புதன்கிழமை காலை காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்த நிலையில் குறித்த நீரோடையில் சடலம் ஒன்று தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டபோது அது எமது தந்தையுடையது என அடையாளம் கண்டோம் எனத் தெரிவித்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.