மாவடிப்பள்ளிப் பெண் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு




சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் காணாமற்போனதாகக் கூறப்பட்ட பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாவடிப்பள்ளி ஆற்றிலிருந்து இன்று முற்பகல் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பெண் காணமற்போனதாக அவரது கணவரால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இதனடிப்படையில் இன்றைய தினம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாவடிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
பெண்ணின் சடலம் சம்மாந்துறை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.