எலியின் தலைக்கு விலை : இது பாகிஸ்தானில்




பாகிஸ்தான் பெஷாவர் நகரில் எலிகளைக் கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதன் வெளிப்பாடாக, இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அங்குள்ள எலிகள் உணவு, உடை -- ஏன், வீடுகளைக்கூட அரித்து சாப்பிடுகின்றன.
எலி கடித்ததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன.
பெஷாவரில் பிடிக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் அரை டாலருக்கு சமமான சன்மானம் வழங்கப்படும் என உள்ளூராட்சி சபை தெரிவித்துள்ளது.
ஆனால் இராணுவப் பகுதிகளில் அது மூன்று டாலராக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிகள் கிட்டத்தட்ட பூனையின் அளவுக்கு இருப்பதனால், பூனைகள் அவற்றை துரத்திப் பிடிக்க அஞ்சுவதாக பெஷாவரிலுள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.