பேதங்களை மறப்புாம். அபிவிருத்திகளை முன்னெடுப்போம்




(க.கிஷாந்தன்)

நல்லாட்சியில் கட்சி பேதங்களையும் தொழிற்சங்க பேதங்களையும் மறந்து மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருவதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிருத்தி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெறிவித்துள்ளார்.

நானுஒயா,டெஸ்போட் மேல்பிரிவு, கிழ்பிரிவு, கிலோஷா ஆகிய பகுதிகளில் இடம் பெற்ற 61 வீடுகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்னன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த காலங்களில் தொழிற்சங்க அடிப்படையில் பாகுபடான நிர்வாகமே மலையகத்தில் நிலவியது எனினும் தாம் மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் பொதுவான நிர்வாகத்தை நாம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

காணிகளை பகிந்தளிப்பதன் மூலம் சொந்த காணிகளில் பொதுமக்கள் முறையான பயனை பெற முடியாத நிலமை ஏற்படும் எனவே 50 வீதமான காணிகளை பெருந்தோட்ட மக்களுக்கும் மிகுதியை நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்து இருந்தார்.

ஆனால் பெருந்தோட்டங்களை முழுமையாக மக்களுக்கே பகிர்ந்தளிக்கும் வகையிலான திட்டத்திற்க்கு தாம் முழுமையாக ஆதரவு வழங்கபோவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் சுட்டிகாட்டினார்.