தங்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நெருக்குதல்கள் தொடர்பில் நாளை (30) ஆம் திகதி கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜெனீவா சென்று அனைத்துப் பாராளுமன்ற சங்கத்தின் செயலாளருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தில், கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலகப்பெரும், விமல் வீரவங்ச, உதய கம்மம்பில, ரோஹித அபேகுணவர்தன, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன