டில்லியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களைப் பெற்றனர். அணியின் சார்பாக அதிகபட்சமாக காலின் மன்ரோ அதிகபட்சமாக 46 ஓட்டங்களை எடுத்தார்.
எனியின் அணியின் அதிரடி ஆட்டக்காரராக அறியப்படும் மார்டின் கப்தில் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
முதல் 15 ஓவர்களில் சீராக ஓட்டங்களை குவித்த நியூசிலாந்து அணியினர் கடைசி ஐந்து ஓவர்களில் பெரிய அளவுக்கு ஓட்டங்களை எடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து ஆண்டிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் சிறப்பாக ஆடி 44 பந்துகளில் 78 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
வியாழக்கிழமை இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையே நடைபெறும் அணி இங்கிலாந்து அணியுடன் இறுதி ஆட்டத்தில் மோதும்.