தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணய்




க.கிஷாந்தன்)

தேங்காய் எண்ணையுடன் “பாம்” எண்ணையைக் கலந்து விற்பனை செய்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட எண்ணை வியாபாரிக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி ஐயாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பிக்க ராஜபக்ச முன்னிலையில் 29.03.2016ல் மேற்படி வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பதுளை மாநகரில் எம். சத்தியசீலன் என்ற எண்ணை வியாபாரிக்கே, மேற்படி தண்டனை வழங்கப்பட்டதாகும்.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே, குறிப்பிட்ட நபருக்கெதிராக, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.