கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்துவிழுந்தது




இந்தியாவின் கொல்கத்தா நகரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த மேம்பாலத்தின் கீழ் தற்காலிக தங்குமிடங்களில் பலர் வசித்துவந்ததாலும், நண்பகல் வேளையில் கீழே பலர் நடந்துச்செல்லும்போது இந்த மேம்பாலம் இடிந்து விழுந்திருப்பதாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்காக கான்கிரீட் படிமங்களை மீட்புப் பணியாளர்கள் உடைத்துவருகின்றனர்.
மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படும் இந்த விபத்தை, ஒரு தாங்கமுடியாத விபத்து என்று உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.