மின்சாரசபை முகாமைத்துவத்தை கடுமையாக எச்சரித்த ரணில்




அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் இலங்கை மின்சாரசபையின் முகாமைத்துவ அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக எச்சரித்துள்ளளார்.
இந்த கூட்டத்தில் மின்சார தடைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கையை ஜெர்மனின் மஸ்சினென்பாப்ரிக் ரெய்ன்ஹூசென் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது.
இதேவேளை மின்சார சபையின் உயரதிகாரிகள், இலகுவான வழியில் தப்பிக்க முயற்சிக்காமல் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.