குடாகம கொமர்ஷல் பகுதியில் தீ




திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம கொமர்ஷல் பகுதியில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காடு 25.03.2016 அன்று தீடிரென  தீபற்றியதால் சுமார் 20 ஏக்கர்  காடு தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இச்சம்பவம் 25.03.2016 அன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்படுத்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் முயற்சித்தபோதும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. 

கொட்டகலை பெற்றோலிய கூட்டுத்தாபன தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள – பத்தனை பொலிஸார் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவு ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்படுத்த பிற்பகல் 2 மணிவரை முயற்சித்தனர். 

ஆனால் சில பகுதிகளில் மட்டுமே அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது. 

எனினும் தீ வேகமாக பரவியதன் காரணமாக சுமார் 20 ஏக்கர் எரிந்து சாம்பலாகியுள்ளமை குறிப்பிடதக்கது.