பாலியல் துஸ்பிரயோக எத்தனிப்பு




(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவ கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு  முயற்சித்த 35வயது குடும்பஸ்த்தர் ஒருவரை 26.03.2016 சனிக்கிழமை அன்று மாலை 05 மணியளவில் கைது செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார்  தெரிவித்தனர்.

பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் அயலில் வசிக்கும் நபரொருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வேளை மேற்படி சிறுமி அந்த நபரிடமிருந்து தப்பித்து வந்து தனக்கு ஏற்பட்ட நிலையை விபரித்துள்ளார்.

இச்சம்பவம் 26.03.2016 அன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொலிஸார் கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் வைத்து கைது செய்து 
 விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த சிறுமி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேக நபர் 27.03.2016 அன்று அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்