எகிப்தின் அலெக்ஸான்டிரியாவிலிருந்து புறப்பட்டு கெய்ரோவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தை கடத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன
கடத்தப்பட்டு சைப்ரஸுக்கு திருப்பிவிடப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்தவர்களில் ஏழு பேரைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்
கடத்தப்பட்டு சைப்ரஸுக்கு திருப்பிவிடப்பட்ட ஈஜிப்ட் ஏர் விமானத்தில் இருந்தவர்களில் ஏழு பேரைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்
அலெக்ஸாண்ட்ராவிலிருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் குண்டுகள் நிரம்பிய இடுப்புப்பட்டி ஒன்றைத் தான் அணிந்திருந்ததாகக் கூறி விமானத்தை கடத்தினார்.
இதையடுத்து அந்த விமானம் சைப்ரஸிலுள்ள லார்னாகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
தற்போது சைப்ரஸில் தஞ்சம்கோரியுள்ள அந்த நபர், அந்நட்டைச் சேர்ந்த தனது முன்னாள் மனைவியைக் காணவேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்தக் கடத்தல் பயங்கரவாதம் தொடர்புடையது அல்ல, ஒரு பெண் சம்பந்தப்பட்டது என சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியாடிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விமானத்தில் இன்னும் ஏழு பேர் உள்ளனர் என எகிப்தின் விமானப் போக்குவரத்து அமைச்சர் கூறுகிறார். என்றாலும் விமானத்தில் உண்மையில் குண்டு இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை