பாகிஸ்தானின் லாகூரில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிகின்றன
லாகூரில் உள்ள குழந்தைகள் பூங்கா ஒன்றுக்கு அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் பூங்காவிற்கு வருகை தந்திருந்ததாகவும், குறித்த தாக்குதலில், ஏராளமான குழந்தைகளும், பெண்களும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் 53 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.